1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : திங்கள், 18 நவம்பர் 2019 (13:19 IST)

மீனம்: கார்த்திகை மாத ராசி பலன்கள்

கிரகநிலை: சுக ஸ்தானத்தில் சந்திரன், ராஹூ - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்ரன் - தொழில்  ஸ்தானத்தில் குரு, சனி, கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்: எப்போதும் இன்முகத்துடனும், இனிய பேச்சுடனும் இருக்கும் மீன ராசி அன்பர்களே,  நீங்கள் எல்லோரிடமும் பழகி எல்லோரையும் உங்கள் பால் ஈர்த்துக் கொள்வீர்கள். ஆடம்பரமாகவும், மிடுக்காகவும் உடையணிவீர்கள். கவர்ச்சியாகவும், கம்பீரமாகவும் காணப்படுவீர்கள். இந்த  மாதம் நண்பர்கள் ஓடி வந்து உதவி செய்வார்கள். செய்தொழிலில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரம் சிறப்பாக அமையும்.
 
பங்கு வர்த்தகத்திலும் லாபம் கிடைக்கும். விரக்தி மனப்பான்மையை விட்டொழித்து  விட்டு நம்பிக்கை சின்னமாகக் காட்சியளிப்பீர்கள். மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் உழைப்பீர்கள். ஆலய திருப்பணிகளுக்கு செலவு செய்து புகழடைவீர்கள். மனதிலும் வைராக்கியம் கூடும். 
 
குடும்பத்தில் நடைபெறும். பணப்புழக்கம் தேவைக்கு அதிகமாகவே இருக்கும். உங்கள் செல்வாக்கு உயரும். பணிகளில் அக்கறையுடனும்,  கவனமுடனும் செயல்படுவது அவசியம். புத்திரப் பேறு, வண்டி, வாகனம் வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகள் கிடைக்கப்பெருவீர்கள்.
 
இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள் தொழிலில் சிறப்பான முன்னேற்றம்  காணப்படும். போடியாளர்களால் உங்கள் வாடிக்கையாளர்களைத் தங்கள் வசம் ஈர்க்க முடியாது. அதேபோல் நீங்களும் வாடிக்கையாளர்களைத்  திருப்தி படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
 
உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சகபணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பாராத வருமானம் மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வேலை நிமித்தமாக வெளியூர்களில் தங்கியிருந்தவர்கள் குடும்பத்துடன் சேரும் வாய்ப்பு  கிடைக்கும். 
 
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். உங்கள் வாழ்க்கை வசதிகளைப்  பெருக்கிக் கொள்வீர்கள். வண்டி, வாகன வசதிகள் அமையக்கூடும். விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்கப்பெறுவீர்கள்.
 
அரசியல்வாதிகளுக்கு பலரும் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும். மேலிடத்திலிருந்து முழு ஆதரவும்  கிடைக்கப்பெறுவீர்கள். உங்கள் சொல்லுக்கு தனிப்பட்ட மரியாதை கிடைக்கும். பொருளாதார நிலையிலும் திருப்திகரமான முன்னேற்றம்  காணப்படும்.
 
பெண்களுக்கு குடும்பத்தில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். குடும்பத்தினரின் அன்பையும், நன்மதிப்பையும் குறைவரப் பெற்று மகிழ்ச்சி  அடைவீர்கள். வேலைக்குப் போகும் பெண்கள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறுவீர்கள். 
 
மாணவர்களுக்கு படிப்பில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். அதன்மூலம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பெற்றோர் ஆசிரியர் மட்டுமின்றி   அனைவரும் பாராட்டும் அளவிற்கு நீங்கள் நடந்து கொள்வீர்கள். சிலருக்கு வேலை வாய்ப்பும் படிக்கும் போதே அமையும். உயர்கல்விக்காக  சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பைப் பெறுவீர்கள். 
 
பூரட்டாதி 4-ம் பாதம்: இந்த மாதம், உத்தியோகஸ்தர்கள் விருப்பங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் தடையின்றி நடந்து  முடியும். மருத்துவச் செலவுகள் குறைந்துவிடும். உறவினர் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு நல்ல  முறையில் இருக்கும். மனைவி வழியில் அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பூர்வீகச் சொத்து வகையில் சிலர் எதிர்பாராத  தனலாபத்தைப் பெறுவீர்கள்.
 
உத்திரட்டாதி: இந்த மாதம், சிறு தடங்கலுக்குப் பின் காரிய வெற்றி கிடைக்கும். நல்லவர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு  சச்சரவுகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீர்ந்து விடும். கோபத்தைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வது  நல்லது. உடல் நலத்தில் பெரிய பாதிப்புகள் இருக்காது. எனினும் கவனம் தேவை.
 
ரேவதி: இந்த மாதம், நன்மையும் தீமையும் கலந்த பலன்களாகவே இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணிகளில் கவனம் செலுத்துவது அவசியம்.  நீண்டநாட்களாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உறவினர் வருகை, சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற  மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பணவரவில் தடை இருக்காது.
 
பரிகாரம்: சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யவது நன்மை.  “ஓம் ஷம் ஷண்முகாய நம:” என்ற மந்திரத்தை தினமும் 15  முறை சொல்லவும். 
 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 18, 19; டிசம்பர் 15, 16.